rinku singh [File Image]
ஐபிஎல் 2023 -யில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் ஒரு சில போட்டிகளில் அருமையாக விளையாடினார். குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 472 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக அவர் அயலர்ந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
நேற்று அயலர்ந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரிங்கு சிங் விளையாடினார். நேற்று போட்டியில் விளையாடியது தான் அவருக்கு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் விளையாடித்தற்கு முன்பே இந்திய அணி ஜெர்சியை அணிந்து விளையாடவேண்டும் என்பது தன்னுடைய கனவு என்று தெரிவித்து இருந்தார். அந்த கனவு நேற்று நிறைவேறிய நிலையில், சற்று எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் சில விஷயங்களை பகிர்ந்தார்.
நான் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்ததால் இது ஒரு இனிமையான உணர்வு. நான் கிட்டத்தட்ட 10-12 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தேன், என்னுடைய பெற்றோர்கள் எனக்கு சொல்லி கொடுத்த விஷயம் என்னவென்றால், நம்மளுடைய நாட்டை பெருமைப்படுத்தவேண்டும் என்பது தான். என்னுடைய பெற்றோர்கள் ஐபிஎல் போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது போல இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார்கள். கிட்டத்தட்ட என்னுடைய பல ஆண்டுகள் கனவு இப்போது நிறைவேறிவிட்டது.
இந்திய அணியில் எனது தேர்வைப் பற்றி எனக்கு அழைப்பு வந்தபோது நான் எனது நண்பர்களுடன் நொய்டாவில் இருந்தேன். செய்தி வந்த உடனேயே நான் என் அம்மாவை அழைத்தேன், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். என்னுடைய அம்மாவின் குரலைக் கேட்டு, மகிழ்ச்சியின் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாவிடம் அழுதுவிட்டேன்.
நான் இந்திய அணிக்காக விளையாடுவதால் என்னுடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்தியாவுக்காக விளையாட அழைப்பை வந்தவுடன் என்னுடைய அம்மா என்னிடம் என்னால் முடிந்தவரை கடினமாக உழைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். என்னுடைய அம்மாவின் கனவும் என்னுடைய கனவு இப்போது நடந்துள்ளது. அம்மா கூறியதை போல நான் கடினமாக உழைப்பேன்.” எனவும் ரிங்கு சிங் தெரிவித்தார்.
மேலும் பேசிய ரிங்கு சிங் “இன்றுவரையிலான எனது பயணத்தில் எனது குடும்பம் பெரும் பங்கு வகித்தது. என் தொழிலுக்கு போதுமான நிதி இல்லாதபோது, என்னைத் தொடர என் அம்மா மற்றவர்களிடம் கடன் வாங்கினார். இன்று நான் இந்த நிலையில் இருப்பது அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு” எனவும் ரிங்கு சிங் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை இந்திய அணி தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது. அடுத்தாக 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
6.5 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.தொடர்ந்து பெய்த மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வத் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…