rishabh pant india [File Image]
SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்கும், முதல் டி20 ஐ பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் 2024 டி 20 உலககோப்பையை வென்று அசத்திய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே சமயம் இலங்கை தொடருக்கான டி20 அணியில் உலகக்கோப்பையில் விளையாடி சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் ஜிம்பாப்வேயில் சிறப்பாக விளையாடிய நிலையில், அவர்களும் அணியில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறியுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் வரும் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு குறைவு எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இலங்கை டி20 போட்டிக்கான இந்திய அணி சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், துருவ் ஜூரல், அவேஷ் கான், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் தேஷ்பான்/துஷ்பான்
விளையாட வாய்ப்பு இருக்கும் வீரர்கள் : ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (c), ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்/துஷார் தேஷ்பாண்டே விளையாடலாம் என எதிர்பார்ப்பு.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…