Axar Patel Yuzvendra Chahal [file image]
2023-ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவுள்ள 17 பேர் கொண்ட இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துவிட்டது.
ஒருபக்கம் அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறவில்லை என்றும், மற்றோரு பக்கம் அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை எனவும் ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில்,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ஆசிய கோப்பை 2023-க்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலை விட அக்சர் படேல் தனது பேட்டிங் திறன் காரணமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அக்சர் படேல் தேர்வுக்கு காரணம்
இது தொடர்பாக பேசிய சவுரவ் கங்குலி ” ஆசிய கோப்பை 2023-க்கான இந்திய அணியில் அக்சர் படேல் தேர்வு செய்ய காரணம் அவருடைய பந்துவீச்சையும் தாண்டி அவர் நல்ல ஒரு பேட்ஸ்மேனும் கூட, எனவே யுஸ்வேந்திர சாஹலை விட அக்சர் படேல் தனது பேட்டிங் திறன் காரணமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். என்னைப்பொறுத்தவரை இது ஒரு நல்ல தேர்வு என்று தான் நான் நினைக்கிறேன்” என கூறினார்.
சாஹல் மீண்டும் வர முடியும்
தொடர்ந்து பேசிய கங்குலி ” அணியில் யாராவது காயம் அடைந்தால் சாஹல் இந்திய அணிக்கு மீண்டும் வர முடியும். ஏனென்றால், இது 17 பேர் கொண்ட அணி, எப்படி இருந்தாலும், 2- பேர் வெளிய இருக்கவேண்டியது அவசியம் தான். எனவே, யாருக்காவது அணியில் காயம் ஏற்பட்டு அவரால் விளையாட முடியாமல் இருந்தால் நிச்சியமாக சாஹல் திரும்பி வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது” எனவும் கூறினார்.
இந்தியாவா? பாகிஸ்தானா?
கங்குலி கொடுத்த பேட்டியில் தொகுப்பாளர் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த கங்குலி ” என்னால் தனிப்பட்ட முறையில் இந்த அணி வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது. இரண்டு அணியும் நல்ல வீரர்களை கொண்டுள்ள அணி தான்.
எனக்கு இரண்டு அணிகளும் மிகவும் பிடிக்கும். தரவரிசைகள் முக்கியமில்லை, அந்த நாளில் யார் நன்றாக விளையாடுகிறார்கள் என்பது முக்கியம். எனவே, அந்த நாளில் யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்” எனவும் கங்குலி தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…