ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடி அதில் 3 வெற்றியும், 6 தோல்வியும் பெற்று 6 புள்ளியுடன் சரிசமமாகஒரே நிலைமையில் உள்ளது.
எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றான பிளே-ஆப் வாய்ப்பில் விளையாட முடியும். அவ்வகையில் இரு அணிகலுக்கும் இது வாழ்வா?-சாவா? என்ற போர் தான் இன்றைய ஆட்டம் இருக்கும்.
ஐ.பி.எல்-லில் பங்கேற்ற எல்லா தொடரிலும் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்த ஒரே அணி சென்னை அணி இம்முறை அந்த பெருமையை இழந்து விடுமோ? என்று ரசிகர்கள் மனமானது நினைக்கின்றது.
சென்னை அணியில் டாப்-3 வீரர்கள் பிளிஸ்சிஸ், வாட்சன், அம்பத்தி ராயுடு நன்றாக நிலையில் ஆடுகிறார்கள். ஆனால் மிடில் வரிசை சற்று சொதப்பலாக உள்ளது.
மேலும் டோனியின் மோசமான பேட்டிங்கே (9 ஆட்டத்தில் 136 ரன்) பின்னடைவுக்கு காரணமாக உள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே ராஜஸ்தானுக்கு எதிராக 216 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி போது 200 ரன்கள் எடுத்து இலக்கை நெருங்கி வந்த சென்னை அணி போராடி தோற்றது. இந்த தோல்விக்கு பழிதீர்த்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்பதே ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.
இதற்கு முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவிடம் போராடி தோற்ற ராஜஸ்தானும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் என தரமான வீரர்கள் கொண்டு இருந்தும் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
முதல் 2 ஆட்டத்தில் ரன்மழை பொழிந்த சஞ்சு சாம்சன் அடுத்த 7 ஆட்டங்களில் பேட்டிங்கை மறந்தது போல ஆடியது அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
அதிரடி வீரர்கள் என்ற பெயருக்கு சொந்தமான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரிடம் ஆகியோரிடம் இருந்து முழுமையான திறமை வெளிப்படவில்லை.
இன்று தங்களது அணியை தூக்கி நிறுத்த இவர்கள் ரன்வேட்டை நடத்த வேண்டியது அவசியம். இரு அணிகளுமே வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…