அனல்பறக்கப்போகும் இன்றைய போட்டி..! குஜராத் மற்றும் மும்பை அணி பலப்பரீட்சை..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் 2023 தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 35 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோவில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வெற்றி பெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா மற்றும் சாஹா சிறப்பாக விளையாடி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்து பந்துகளை பறக்கவிட்டனர். ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசினார்.

ரோஹித் சர்மா தலைமையில் விளையாடுகின்ற மும்பை அணி, இதுவரை நடந்த 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி, கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் தோல்வியை தழுவியதால் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றிபெற முழு முனைப்போடு போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

குஜராத் vs மும்பை : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

குஜராத் டைட்டன்ஸ் : 

விருத்திமான் சாஹா (W), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (C), விஜய் சங்கர், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், மோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் :

ரோஹித் ஷர்மா (C), இஷான் கிஷன் (W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

40 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

1 hour ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

4 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

4 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

5 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

6 hours ago