U-19 உலகக்கோப்பை: இன்று அரையிறுதி இந்தியா- ஆஸி., பலப்பரீட்சை..!

Published by
Castro Murugan

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- இந்தியா  இன்று மாலை 6;30 மணிக்கு மோதுகிறது.

U-19 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய அணி இதுவரை வலுவாக செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.  லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும்  உகாண்டா அணிகளை  எளிதாக தோற்கடித்து.  காலிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் சிரமங்களை எதிர்கொண்டு வெற்றியை பதிவு செய்தனர்.

காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது. இந்தியா இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. நான்கு முறை சாம்பியனான இந்திய அணி கடந்த சீசனில் ரன்னர் அப் ஆனது.  அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இருவருக்குமிடையே இன்று மாலை 6;30 மணிக்கு இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேப்டன் யாஷ் துல்  உட்பட ஐந்து முன்னணி வீரர்களுக்கு கொரோனாவால்  பாதிக்கப்பட்டனர். இதனால், இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தாலும் அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடி அணியை வெற்றிப் பாதையில் வழி நடத்தி உள்ளனர். குறிப்பாக உகாண்டா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6  மாற்று வீரர்கள் இடம் பெற்று இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது:

இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக, இந்திய அணி 2016, 2018 மற்றும் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. 2018 இல், இந்தியா உலகக் கோப்பையையும் வென்றது. அதே நேரத்தில் 2016 மற்றும் 2020 இல் அந்த அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

இந்திய அணி வீரர்கள்: 

யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷித் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனிஷ்வர் கவுதம், தினேஷ் பானா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மனவ் பராக், கௌஷால் தாம்பே, , வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவி குமார், கர்வ் சங்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
Castro Murugan

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago