கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 14,000 ரன்களை பதிவு செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 142 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்கு நிர்ணயித்தது. பின்னர், இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 142 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 38 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில், 4 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும். முதல் 2 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 4 மற்றும் 13 ரன்கள் எடுத்தார். இதனால், விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியதும், 3 வது போட்டியில் கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தாம் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடினார்.
இந்நிலையில், கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 14,000 ரன்களை பதிவு செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இவர் மொத்தம் 22 சதங்கள் மற்றும் 86 அரைசதங்கள் அடித்துள்ளார். கெய்ல் டி 20 கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் மற்றும் ஆயிரம் சிக்ஸர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெய்ல் அதிகபட்ச ஸ்கோர், 2013 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக விளையாடும்போது, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 175 அடித்தது ஆகும்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் பொல்லார்ட் 10836 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் ஷோயிப் மாலிக் 425 போட்டிகளில் 10,741 ரன்களுடன் பொல்லார்ட்டுக்கு அடுத்த இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 304 போட்டிகளில் 10017 ரன்களும், விராட் கோலி 310 போட்டிகளில் 9992 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…