RavindraJadeja Tweet [Image- PTI]
தன்னை அவுட் ஆகும்படி கூறிய ரசிகர்களுக்கு, நேற்று ஜடேஜா மதிப்புமிக்க வீரர் விருது வாங்கி பதிலடி ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணைகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் முதன்முறையாக வீழ்ந்தது.
சென்னை அணியும் ஐபிஎல் பைனலுக்கு முதல் அணியாக நுழைந்தது. போட்டிக்கு பிறகு சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா, அப்ஸ்டாக்ஸ் (Upstox) சிறந்த மதிப்புமிக்க வீரர் என்ற விருதை வாங்கினார். இந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், சிறப்பாக பவுலிங் செய்து 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
முன்னதாக சென்னை அணி பேட்டிங் செய்யும் பொழுதெல்லாம் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு, விளையாடிக் கொண்டிருக்கும் ஜடேஜாவை ஆட்டமிழக்கும் படி தோனியின் அன்பான ரசிகர்கள் ஜடேஜாவிடம் மைதானத்தில் கோஷம் எழுப்புவார்கள். இதனையடுத்து நேற்று சிறந்த மதிப்புமிக்க வீரர் விருது வாங்கிய ஜடேஜா தனது ட்வீட்டில், அப்ஸ்டாக்ஸ்- க்கு நான் மதிப்புமிக்க வீரர் என தெரிகிறது, ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவதில்லை என கூறியுள்ளார்.</p
>
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…