AUSvNED 1st half [File Image]
AUSvsNED: 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டியானது இன்று, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில் நெதர்லாந்து அணி பந்துவீசி வருகிறது.
இதன்படி, ஆஸ்திரேலியா அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். இதில் மிட்செல் பெரிதாக சோபிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேறினார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அவருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்னர்.
சிறப்பாக விளையாடிவந்த வார்னர் அரைசதம் அடித்து அசத்த, அவரையடுத்து ஸ்டீவன் ஸ்மித்தும் அரைசதம் கடந்தார். தொடர்ந்து இருவரும் பந்துகளை பறக்கவிட, ஸ்டீவன் ஸ்மித் ஆர்யன் தத் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே பேட்டை சுழற்றி 35 வது ஓவர் முடிவில் அரைசதம் எட்டினார். பின் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
ஜோஷ் இங்கிலிஸ் களத்தை விட்டு வெளியேற, அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கி சிக்ஸர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டு 40 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார். கேமரூன் கிரீன் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் கிளென் மேக்ஸ்வெலும் களத்தை விட்டு 106 ரன்களுடன் வெளியேறினார்.
அவரையடுத்து மிட்செல் ஸ்டார்க் வந்த வேகத்தில் வெளியேற, இறுதியில் ஆடம் ஜம்பா மற்றும் பாட் கம்மின்ஸ் களத்தில் நின்றனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 106 ரன்களும், டேவிட் வார்னர் 104 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 62 ரன்களும் குவித்துள்ளார்கள்.
நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீடே விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். தற்போது 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…