WC2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் விலை எவ்வளவு, முன்பதிவு பற்றிய தகவல்கள் இங்கே…

Published by
Muthu Kumar

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்…

உலகக்கோப்பை 2023:

மிகவும் எதிர்பார்த்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 48 போட்டிகள் இந்தியாவின் 10 நகர மைதானங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 19இல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

அக்டோபர் 5 இல் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத்தின் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 இல் மோதுகிறது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பாகிஸ்தானுடனான போட்டி அக்டோபர் 15இல் குஜராத்தில் நடைபெறுகிறது.

டிக்கெட் எப்படி பெறலாம்:

உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்களை ஐசிசி கிரிக்கெட் (ICC Cricket Worldcup) உலகக்கோப்பையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் நாம்  ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் எனவும், இது குறித்து விரைவில் டிக்கெட் விற்பனை ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையின் இணையதளத்தில் திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் விற்பனை:

இது தவிர டிக்கெட்கள் புக் மை ஷோ, பேடிஎம்(Paytm), போன்ற ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படும் எனவும், பெரும்பாலும் டிக்கெட்கள் நேரடி கவுண்டர்களை விட ஆன்லைனில் தான் விற்கப்படுவதற்கு அதிக  வாய்ப்புகள் இருப்பதாகவும், டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.10,000 வரை மைதானங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

India fix matches [Image- Twitter/@BCCI]

Published by
Muthu Kumar

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

3 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

5 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

6 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

6 hours ago