’12 வீரர்களையும் தயாராக வைத்துள்ளோம்’ – கேப்டன் ஹிர்திக் பாண்டியா !

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : இன்றைய பகல் நேர ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார்.

இன்றைய ஐபிஎல் தொடரின் பகல் ஆட்டமாக மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணியை  மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை மும்பை அணி பதித்துள்ளது.

மும்பை அணியின் இந்த முதல் வெற்றிக்கு பிறகு அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா வெற்றி பெற்றதை குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இந்த முதல் வெற்றியை அனுபவிப்பதற்கு எனக்கு அதிக ஆசையாக இருந்தது. அது இப்போது கிடைத்துள்ளது மேலும், இன்று எங்கள் அணியின் விளையாட்டானது சிறப்பாக இருந்தது.

இன்று எங்கள் யுக்திகளை நாங்கள் அவ்வாறு செயல்படுத்தினோம் என்பதில் நான் பெருமைப்படுகறேன். இனி வருகிற போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்கள் அணியின் மாற்றங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் முக்கியமான 12 வீரர்களையும் நாங்கள் உற்சாகமாகவும் தயாராகவும் வைத்திருக்கிறோம். ஆரம்ப ஓவர்களில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றது எங்களுக்கு நன்றாக அமைத்தது.

அணிக்கு தேவைப்படும் நேரம் தேவையான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ரோமாரியோ ஷெப்பர்டின் இன்னிங்ஸ் முக்கியமானது, அவரது ஆட்டம் இன்றைய போட்டியில் பேசும் வகையில் அமைந்தது. அதே போல இந்த போட்டியில் எனது பந்துவீச்சு அவசியமில்லை, மேலும், தேவையான நேரத்தில் நான் பந்து வீசுவேன்”, என்று போட்டிக்கு பிறகு அணியின் வெற்றியை குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago