நாளை நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். மேலும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதியானவை. எங்களிடம் 2011 முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கு பெற்ற இரண்டு வீரர்கள் உள்ளனர். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தையே தொடர விரும்புகிறோம். நாங்கள் லெவன் அணியை முடிவு செய்யவில்லை.
இரண்டரை ஆண்டு தயாராகி வந்தோம்:
15 பேரில் இருந்து யார் வேண்டுமானாலும் விளையாடலாம். நடப்பு உலககோப்பை தொடரில் பந்துவீச்சாளர்கள் எங்களுக்காக சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். நாங்கள் முதல் நான்கு, ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்தோம். அப்போது எதிரணியை 300 ரன்களுக்கு கீழே கட்டுப்படுத்துவது இந்தியாவில் எளிதானது அல்ல. எங்கள் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
நாங்கள் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை எடுக்க விரும்பும்போது எல்லாம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட்டனர். நாளை நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஏற்கனவே டி20 இறுதிப்போட்டி உள்ளிட்டவற்றில் விளையாடியது மிகுந்த அனுபவத்தை தந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் எதிர்கொள்ள இரண்டரை ஆண்டு காலமாக தயாராகி வந்தோம். இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்பிக்கை” தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…