SRH vs RCB IPL [Image- Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs RCB போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. தற்போது வரை குஜராத் அணி மட்டுமே முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்துள்ளது.
மீதமுள்ள 3 அணிகள் யார் என்பதில் 9 அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் போட்டி பிளேஆஃபுக்கு செல்ல முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
பெங்களூரு அணி பிளேஆப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஹைதராபாத் அணி பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறினாலும் இன்று அந்த அணியின் வெற்றிக்காக மற்ற அணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறனர். டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(C), க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத்(W), ஷாபாஸ் அகமது, மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பர்னெல், ஹர்ஷல் படேல், கர்ண் சர்மா, முகமது சிராஜ்
ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(W), ஹாரி புரூக், க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…