ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மோதவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ராபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30-க்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி, தனது ஹாட்-ட்ரிக் வெற்றியை பெரும். இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்பார்க்கப்படும் XI:
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, டேவிட் மில்லர், ரஷித் கான், அபினவ் மனோகர், வருண் ஆரோன், லாக்கி பெர்குசன், முகமது ஷமி ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…