KKRvsSRH : கொல்கத்தாவை வீழ்த்துமா ஹைதராபாத்? இதுவரை நேருக்கு நேர் மோதிய விவரம்!!

Published by
பால முருகன்

KKRvsSRH  17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேருக்கு நேர் : இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் 25 முறை நேருக்கு நேராக ஒரே போட்டியில் மோதி உள்ளது. இந்த 25 போட்டிகளில் 9 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், 16 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளது. நேருக்கு நேர் மோதிய போட்டிகளை வைத்து பார்க்கையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியே அதிகமுறை வெற்றிபெற்று இருக்கிறது.

எனவே, கண்டிப்பாக கொல்கத்தாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பிலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றயை போட்டியில் விளையாடவுள்ளது. அதைப்போலவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 26 -வது வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கு கிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் 

ஹைதராபாத் அணி

அபிஷேக் சர்மா (அல்லது)  மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (WK), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், இம்ரான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (வாரம்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

இந்த இரண்டு அணிகளிலும் சிக்ஸர்கள் அடிக்க கூடிய வீரர்களான பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங் போன்ற வீரர்கள் இருப்பதால் போட்டி பார்ப்பதற்கு சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

3 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

4 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

5 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

5 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

6 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

6 hours ago