ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வைத்து மோதுகிறது.
ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்படியலில் பலமான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதே நேரம் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5- வது இடத்தில் இருந்து வருகிறது. இந்த போட்டியை வெற்றி பெற்றால் மட்டுமே 12 புள்ளிகளுடன் அடுத்த கட்டம் நோக்கி ஹைதராபாத் அணி நகரும்.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக மொத்தம் 18 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் 9 முறை ராஜஸ்தான் அணியும், 9 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. நேருக்கு நேர் அடிப்படையில் பார்க்கும் போது இரு அணிகளும் சவாலாக விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
ஹைதராபாத் அணி:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜயதேவ் உணத்கட், நடராஜன்.
ராஜஸ்தான் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025