இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!
ஜூலை 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வருகின்ற 15-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது போக, 16-07-2025 மற்றும் 17-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதை தவிர, இன்றைய தினம் சேலம், ஈரோடு, விழுப்புரம், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025