WTCFinal2023 : இதே மைதானத்தில் கடைசியாக ‘ஹிட்மேன் ‘செய்த தரமான சம்பவம்…ட்ரெண்ட் ஆகும் வீடியோ.!!

Rohit Sharma in Test cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் (ஜூன்) 7-ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது.

இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் இரண்டு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இங்கிலாந்தில் தீவிரமாக பயிற்சி எடுத்துவருகிறார்கள்.

இதற்கிடையில், இதே மைதானத்தில் கடந்த ஆண்டு ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இதே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் ஷர்மா 256 பந்துகளில் 127 ரன்கள் எடுத்திருப்பார்.

அதிரடியாக விளையாடிய அந்த போட்டியில் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசி இருப்பார். எனவே, வரும் 7-ஆம் தேதி ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் ரோஹித் ஷர்மாவின் பார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில்,  இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பழைய பார்முக்கு திரும்பி  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rain update tn
anbumani and ramadoss
lock up death ajith
Saktheeswaran - ajith kumar
ENGvIND - ShubmanGill
PMModi - Ghana India