“யார்க்கர் கிங்” நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்..!

Published by
murugan

விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான தமிழ்நாடு அணியில்  வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி தொடரில் இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை அணிகள் தலா 4 முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.  இந்நிலையில், தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் , தினேஷ் கார்த்திக் தற்போது இருவரும் குணமடைந்ததால் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், சையது முஷ்தாக் அலி தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடவில்லை. அதேபோல தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடவில்லை. ஆனால், காயத்தில் இருந்து மீண்ட யார்க்கர் நடராஜன் சையது முஷ்டாக் அலி கோப்பையில்  தமிழக அணியில் இடம்பெற்று இருந்தார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் நடராஜன் சரியாக பந்து வீசவில்லை. இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியில்  வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கேப்டன் விஜய் சங்கர் விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்குக் கேப்டனாக உள்ளார்.

தமிழ்நாடு அணி:

விஜய் சங்கர் (கேப்டன்), ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் சுதர்ஷன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம்.முகமது, ஜே.கௌசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர்.சிலம்பரசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

14 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

40 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

9 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago