இதுதான் கடைசி சீசனா? – வர்ணனையாளர் கேள்விக்கு தோனி பதில்!

MS DHONI

இது எனது கடைசி சீசன் என்று நான் சொல்லவில்லை என்பது போல் சென்னை கேப்டன் தோனி பதில்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 45-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதனிடையே, இப்போட்டிக்கான டாஸ் கேட்பதற்கு மைதானத்துக்கு வந்த சென்னை கேப்டன் எம்எஸ் தோனிக்கு ஸ்டேடியம் முழுவதும் மஞ்சள் நிறம் பெரும் வரவேற்பை அளித்ததுடன், ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர்.

இதன்பின், மைதானத்தில் ரசிகர்களின் சத்தத்தின் மத்தியில் வர்ணனையாளர் டேனி மாரிசன், உங்கள் கடைசி ஐபிஎல் சீசனை அனுபவித்து விளையாடி வருகிறீர்களா? என தோனியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தோனி, இது எனது கடைசி சீசன் என நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள், நான் கிடையாது என சிரித்துக் கொண்டே கூறினார். தோனியின் பதில் மூலம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்