ராகுல்காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது ஜார்கண்ட் நீதிமன்றம்!

அவதூறு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ராகுல் காந்தியின் மனு நிராகரிப்பு.

Rahul Gandhi

அவதூறு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ராகுல் காந்தியின் மனு நிராகரிப்பு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது  ராஞ்சியில் உள்ள எம்பிக்கள்/எம்எல்ஏக்கள் நீதிமன்றம். மோடி என்ற பெயரை தவறாக பேசியதாக பிரதீப் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்தி விலக்கு கோரியிருந்த நிலையில், இதனை நிராகரித்தது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றம்.

2019-ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ராகுல் காந்தி ‘மோடி’ என்ற குடும்பப்பெயரை குறிப்பிட்டு கூறியதையடுத்து பிரதீப் மோடி என்ற வழக்கறிஞர் ராஞ்சியில் புகார் அளித்திருந்தார். ராகுலின் கருத்துக்கள் மோடியின் குடும்பப்பெயர்/தலைப்பு கொண்ட அனைவருக்கும் எதிராக இருப்பதாகவும், அவதூறாகவும் இருப்பதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக ஜார்க்கண்டில் ஒரு அவதூறு வழக்கும், ராஞ்சியில் இரண்டு வழக்குகளும் என மொத்தம் மூன்று அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவதூறு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ராகுல் காந்தியின் மனுவை ஜார்க்கண்ட் நீதிமன்றம் இன்று நிராகரித்து உள்ளது.