ஐபிஎல் போட்டிகளுக்காக இம்மாதம் துபாய் செல்லவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், இன்று சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டர்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், சி.எஸ்.கே. அணி, இன்று முதல் 20 -ம் தேதி வரை (5 நாட்கள்) சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தது.
அதற்காக நேற்று தோனி, ரெய்னா, பியூஸ் சாவ்லா, தீபக் சஹர், உள்ளிட்ட வீரர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்த நிலையில், இன்று முதல் பயிற்சியை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக, பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி தலைமையில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, ரெய்னா உட்பட 15 வீரர்கள், முதல் நாள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கினார்கள். இதனால் போட்டி தொடங்குவது குறித்த ஆர்வம், ரசிகர்களிடையே நிரம்பி வழிகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…