இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை போட்டிக்கு பிறகு விளையாடவில்லை. அதன் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணியுடன் விளையாடி உள்ளது.ஆனால் இந்த ஒரு தொடரில் கூட தோனி விளையாடவில்லை.
இதனால் தோனி எப்போது விளையாடுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தோனி மைதானத்தில் பயிற்சி செய்து போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால் அடுத்த மாதம் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி கண்டிப்பாக கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் தோனி இடம்பெறவில்லை இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசியா லெவேன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃ ப் தி வேர்ல்டு அணிக்கும் இடையே 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆசியா கிரிக்கெட் அணிகளை சார்ந்த வீரர்கள் இடம் பெற உள்ளன. இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சில இந்திய விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டு உள்ளது.
அதில் தோனி, ஹார்திக் பண்டியா , கோலி ,பும்ரா ஆகியோர் ஆசிய லெவன் அணியில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பிசிசி அனுமதி கொடுத்தால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக தோனி மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது .
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…