கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவளிக்க சச்சின் முன்வந்துள்ளார்.
இந்தியாவில் 7,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. அதனால் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவளிக்க முன் வந்துள்ளார். ஏற்கனவே சச்சின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…