போண்டஸ்லிகா கால் பந்து தொடரில் (bundesliga Football league) ஹோபன்ஹெய்ம் கிளப் அணியின் (Hoffenheim Football club) வீரர் முகத்தில் துப்பியதற்காக போர்ஸியா மோன்செங்கலாட்பாக் (Borussia Mönchengladbach club ) கிளப் அணியின் வீரர் மார்கஸ் துராம் 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரு அணிகளுக்கும் நடைபெற்ற போட்டியில் ஹோபன்ஹெய்ம் கிளப் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் இந்த போட்டியின் நடுவே ஸ்டீபன் போஸ் மற்றும் மார்கஸ் துராம் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவத்தின் போது ஹோபன்ஹெய்ம் கிளப் அணியின் வீரரான ஸ்டீபன் போஷின் முகத்தில் துப்பியுள்ளார் போர்ஸியா மோன்செங்கலாட்பாக் கிளப் அணியின் வீரர் மார்கஸ் துராம். இதன் காரணமாக போட்டியின் நடுவர் ஃபிராங்க் வில்லன்போர்க் துராமை போட்டியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
மேலும் மார்கஸ் துராமுக்கு 40,000 யூரோக்கள் ($ 50,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே போர்ஸியா மோன்செங்கலாட்பாக் இயக்குனர் மேக்ஸ் எபெர்ல் கூறுகையில்,மார்கஸ் வேண்டுமென்றே ஸ்டீபன் போஷில் துப்பவில்லை.ஸ்டீபன் போஷுடனான ஒரு வாக்குவாதத்தின் போது அவர் பல முறை பிரெஞ்சு மொழியில் திட்டியதாகவும், அவர் தன்னிச்சையாக வார்த்தைகள் மற்றும் மிகுந்த உற்சாகத்தின் போது துப்பினார் என்றும் அவர் என்னிடம் கூறியதாக எபெர்ல் தெரிவித்துள்ளார்.ஆனால் மார்கஸ் துராம் போட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.மேலும் அவரது பதிவில், இன்று என் கதாபாத்திரத்தில் இல்லாத ஒன்று நடந்துள்ளது.இனி ஒருபோதும் இதுபோன்று நடைபெறாது. நான் தவறான வழியில் பதிலளித்துள்ளேன். ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது, வேண்டுமென்றே அல்ல என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…