நடிகை நடாஷா ஸ்டான் இந்தியில் “சத்யாகிரகஹா” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார். பின்னர் சில படங்களில் பாடல்களுக்கு நடனமாடினார்.இதைத்தொடர்ந்து தமிழில் “அரிமா நம்பி” திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் உன்னில் பாதி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவும் நடஷாவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவி வந்தது. இது குறித்து குறித்து இருவரும் ஒன்றும் கூறாமல் இருந்தனர்.இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 11-ம் தேதி ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாள் அன்று நடாஷா வாழ்த்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
புத்தாண்டை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். அதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க எதிரான டி20 போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பின்னர் எந்த தொடர்களில் அவர் விளையாடவில்லை.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலும் இவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணி விளையாடும் தொடரில் இடம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…