MSD and RAINA [Image Source : twitter/@ChennaiIP]
ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு, மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தோனி கூறியதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய ஆட்டத்திற்காகவே பல ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு ரசிகர்களின் மனதிற்குள் ஒரு பயம் கலந்த வேதனைக்குரிய கேள்வி எழுப்பும் விஷயம் என்னவென்றால், இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல் ஆக இருக்கப்போகிறதா..? என்று தான்.
இது குறித்து தோனியிடம் கேட்டாலும் கூட தனது திட்டங்கள் குறித்து தெளிவான பதிலை அளிக்க மறுத்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே அணி வீரரான சுரேஷ் ரெய்னா தோனி தன்னிடம் ஓய்வு பெறுவது குறித்து பற்றிய பேசிய ரகசிய தகவலை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
ஊடகத்திற்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா ” கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் தோனியை சந்தித்தேன். அவரிடம் நான் ஓய்வு பற்றி கேட்டேன். அதற்கு அவர் கோப்பையை வென்ற பிறகு, இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன் என உறுதியாக கூறினார்” என்று ரெய்னா கூறியுள்ளார். மேலும் பேசிய ரெய்னா “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடிவருகிறது என்றும் கூறியுள்ளார்.
ரெய்னாவிடம் தோனி கூறிய வார்த்தைகள் அனைத்தும் ஐபிஎல்லின் மற்றொரு சீசனில் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…