IND vs BAN : 2-வது டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? யுக்திகள் என்ன?

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.

India's Winning Tactics For 2nd Test

கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன் பிறகு இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது, அதில் டெஸ்ட் போட்களில் விளையாடுவது போல அல்லாமல் டி20 போட்டிகளில் விளையாடுவது போல் தனது தொடக்கத்தை அமைத்தது.

அதிலும், குறிப்பாக இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதம் அடித்து சாதனைப் படைத்தார். மேலும், இந்திய அணியும் 10.1 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து சர்வதேச டெஸ்ட் தொடரில் அதிவேகமாக 100 ரன்கள் எட்டிய அணி என்று பெருமையை பெற்றது.

தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? என்று கேட்டால் கண்டிப்பாக உள்ளது. அதன்படி, என்ன செய்தால்?, என்ன யுக்தியை கையாண்டால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம். இந்திய அணி தற்போது 271 ரன்கள் எடுத்து 7  விக்கெட்டுகள் இழந்துள்ளது.

இதனால், தற்போது 38 ரன்கள் முன்னிலையில் இருந்து வருகிறது. இன்றைய நாள் முடிவதற்கு இன்னும் 23 ஓவர்கள் மட்டுமே இருக்கிறது. இந்த 23 ஓவர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணி இன்றைய நாளுக்குள் விரைவாக 300 ரன்கள் அல்லது 400 ரன்கள் வங்கதேச அணியின் ஸ்கோரை விட முன்னிலை பெற வேண்டும். அப்படி முன்னிலை வைத்து வங்கதேச அணியை நாளை பேட்டிங் செய்ய விட வேண்டும்.

நாளை நடக்கும் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி மிக விரைவாக வங்கதேச அணியை முன்னிலைப் பெற விடாமல், வங்கதேச அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். இப்படி செய்வதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை குறிப்பிட்ட ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸுடன் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றுவார்கள்.

தற்போது, இந்திய அணிக்கு வெற்றி கிடைப்பதற்கு ஒரே யுக்தி இதுதான். அதை இந்திய அணி தற்போது செயல்படுத்தி வருகிறது. ஆனால், இதில் கடினமான விஷயம் என்னவென்றால் இந்திய அணி பேட்டிங்கில் அதிக ரன்கள் முன்னிலை பெற்றாலும், நாளை வங்கதேச அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுப்பது இந்திய அணியின் பவுலர்களுக்கு மிகச் சவாலாகவே அமையும்.

அதுவும் வங்கதேச அணியை ரன்களில் முன்னிலை பெறவிடாமல் இந்த 10 விக்கெட்டையும் எடுக்க வேண்டும். எனவே, இந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனைத் தாண்டி இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்த போட்டியில் வெற்றி பெறுவார்களா? அல்லது இந்திய அணி விளையாடி வரும் இந்த யுக்தியை வங்கதேச அணி முறியடித்து போட்டியை ட்ரா செய்வார்களா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin-Ajith kumar
Ajithkumar Mystery Death
sivaganga lockup death
Madurai Branch of the High Court
mk stalin speech
elon musk vs donald trump