ஐபிஎல் 2020- க்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பி.சி.சி.ஐயின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளதால் பங்கேற்கும் 8 அணி வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அங்கு சென்று தனிமைப்படுத்திக்கொண்டனர். பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, நெகட்டிவ் வந்தால் மட்டுமே பயிற்சி ஆட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது ஒரு சில அணிகள் தங்களது பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, துபாயில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல்க்காக எமிரேட்ஸில் இருக்கும் பி.சி.சி.ஐ-யின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஐ.பி.எல் இல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துவ ஆணையத்தின் உறுப்பினருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று மட்டும் 735 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்று ரசிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா கண்டறியப்பட்ட சென்னை அணி வீரர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…