நார்வே செஸ் : நார்வே நாட்டில் நடைபெற்று வரும் இந்த நார்வே செஸ் தொடரின் 6 சுற்றுகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதில் முதல் 3 சுற்றுகளில் நன்றாக விளையாடி புள்ளிபாட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தா அதன் பிறகு 4-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பின் நடந்து முடிந்த 5-வது சுற்று முடிவில் தமிழக செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்கா செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஃபேபியானோ கருவானாவை க்ளாசிக்கல் போட்டியில் எதிர்கொண்டு தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் முன்னேறினார்.
ஆனால், நேற்று நடந்த 6-வது சுற்றில் ஈரான் நாட்டை சேர்ந்த அலிரேசா ஃபிரோஸ்ஜாவை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா முதலில் நடைபெற்ற க்ளாசிக்கல் சுற்றில் ட்ரா செய்தார். அதனை தொடர்ந்து இருவருக்கும் அர்மகெடான் (Armageddon) சுற்று நடைபெற்றது. அதில் பிரக்ஞானந்தா, அலிரேசாவிடம் தோல்வியடைந்தார்.
இதனால், 9.5 புள்ளிகளுடன் அவர் புள்ளிபட்டியலில் 3-வது இடத்திற்கு கீழிறங்கி இருக்கிறார். மேலும், மறுபக்கம் நடைபெற்ற வேறொரு போட்டியில் நார்வே நாட்டின் செஸ் ஜாம்பவானான மேக்னஸ் கார்ல்சன், சீனாவின் செஸ் வீரரான டிங் லிரினை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் டிங் லிரினை தோற்கடித்து 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வகித்து வருகிறார். அதே போல 6-வது சுற்றில் ஹிக்காரு நகமுராவும், ஃபேபியானோ கருவானாவிடம் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். மேலும், நார்வே செஸ் தொடரின் 7-வது சுற்று இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…