நாளை நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். மேலும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதியானவை. எங்களிடம் 2011 முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கு பெற்ற இரண்டு வீரர்கள் உள்ளனர். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தையே தொடர விரும்புகிறோம். நாங்கள் லெவன் அணியை முடிவு செய்யவில்லை. இரண்டரை […]
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்கிடையில் செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், “சிறப்பான ஆடுகளமாக அகமதாபாத் இருக்கும் என நம்புகிறோம். ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சிறந்த வீரர்கள். ஆனால் நாளை ஆட்டத்தில் அவர்களுக்கு என தனி திட்டம் எதுவும் இல்லை. உலக கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும். நாங்கள் போட்டியின் நிலைமையை தகுந்தவாறு […]
அகமதாபாத்தில் நாளை நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிவிப்பின்படி, டெல்லியில் இருந்து ஒன்று மற்றும் மும்பையில் இருந்து மூன்று ரயில்கள் சனிக்கிழமை மாலை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அகமதாபாத்தை சென்றடையும் என கூறப்படுகிறத. சிறப்பு ரயில் முன்பதிவு: போட்டி முடிந்ததும் ரயில்கள் திங்கள்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகமதாபாத்திற்கு […]
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் கலந்து கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் கலந்துகொள்ளவதாக தகவல் வெளியான நிலையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை […]
அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 4 இந்திய வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் […]
புதிய கேப்டன்கள் அறிவிப்பு: உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2011 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு சென்றது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வரவில்லை. இம்முறை அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து கேப்டன் […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் 2 முறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியும், ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட […]
நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் […]
உலகக்கோப்பையில் காயம்: நடப்பு உலகக்கோப்பையில் புனேயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். பின்னர் உலகக்கோப்பையின் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவரது காயம் இன்னும் ஆறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குறித்து மருத்துவக் குழு முடிவு எடுக்க வேண்டும். விரைவில் அவருக்கு கணுக்கால் அறுவை சிகிச்சையும் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
கொல்கத்தாவில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 213 ரன்கள் இலக்கை 16 பந்துகள் மீதமிருக்க, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 3-வது லீக் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது. இதில் […]
கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை அனுபவித்து வருகிறார். உத்தரகாண்டில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அவருடன் அவரது மனைவி சாக்ஷி தோனியும் வந்திருந்தார். இருவரும் கிராமத்திற்குச் சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் காலை 10.45 மணியளவில் அவரது கிராமமான ல்வாலியை […]
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 47, ஷுப்மான் கில் 80 ,விராட் கோலி 117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, கே.எல் ராகுல் 39 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டை வீழ்த்தினார். 398 ரன்களை இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டேரில் […]
IND vs AUS: இந்தியா உள்ள பல இடங்களில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வரும், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் ஆனது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. அதன்படி, முதலாவதாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை சாம்பியனாகவும், இந்திய அணி இரண்டு முறை சாம்பியனாகவும் உள்ளது. இந்த […]
கடந்த அக்டோபர் 5ம் தேதித் தொடங்கிய 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த தொடரில் விளையாடிய 10 அணிகளில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து இரண்டு அரையிறுதிப் போட்டிகள் முறையே நேற்று (15.11.2023) மற்றும் நேற்று முன்தினம் (16.11.2023) நடைபெற்றது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில், […]
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். முதலில் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 397 எடுத்தது. அடுத்து […]
2023 ஐசிசி 13வது உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களின் ஆரவரத்துக்கு மத்தியில் தொடங்கியது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று 45 லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி […]
பிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து 2026 தகுதிச் சுற்றுப் போட்டிகள் குவைத்தில் நடந்து வருகின்றன. இதில் குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டம், குவைத் நகரில் உள்ள 60,000 இருக்கைகள் கொண்ட ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (16.11.2023) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. முதல் பாதியில் இந்திய அணி தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் […]
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்து அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார். இதில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்படி குயின்டன் டி காக் 3 ரன்னிலும், டெம்பா பவுமா ரன்கள் ஏதும் எடுக்காமலும் […]
SAvsAUS: ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாயை எதிர் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். குயின்டன் மட்டுமே 3 ரன்கள் […]