டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தினார்.
இந்நிலையில்,தற்போது நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்எல் 3 போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத்,உக்ரைனின் ஒலெக்சாண்டர் சைர்கோவை 21-12, 21-9 என்ற கணக்கில் 30 நிமிடங்களுக்குள் தோற்கடித்து,அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும்,பாரா பேட்மிண்டன் அரையிறுதி மற்றும் பதக்கப் போட்டிகள் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும்.
முன்னதாக ,இன்று காலை நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுபோட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…