Rohit Sharma [File Image]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிக்களிலும் ஒரு ரன்கூட அடிக்காமல் டக்-அவுட் ஆனார்.
சூப்பர் ஓவரில் ஆப்கானை வீழ்த்தி…ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி..!
இதன் காரணமாக ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்தெறியும் வகையில், நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் அசத்தலாக விளையாடி சதம் விளாசி சாதனை படித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
சதம்
நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 5-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 4 சதங்கள் எடுத்து 2 ஆவது இடத்தில் உள்ளனர்.
சிக்ஸர்
டி20 போட்டிகளில் அதிகம் சிக்ஸர் விளாசிய கேப்டன் என்ற சாதனையையும் நேற்று ரோஹித் சர்மா படைத்தார். நேற்றைய போட்டியில் 8 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக (86) சிக்சர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை பின்னுக்கு தள்ளி (90) சிக்ஸர் விளாசி சாதனை படைத்துள்ளார். முன்னதாக 82 சிக்ஸர்கள் ரோஹித் விளாசி இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 8 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் கேப்டனாக விளையாடி அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 90-ஆனது. .இதன் ம்.உலா.ம். இந்த சாதனையை படைத்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…