பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து இறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பின்னர் விக்கெட்டை தொடர்ந்து பறிகொடுத்தது.இதனால் பாகிஸ்தான் அணி 86.2 ஓவரில் 240 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 76 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி தொடங்கியது.
தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஜோ பர்ன்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும் ,சிறப்பாகவும் விளையாடி வந்த இருவரும் அரைசதம் அடித்தனர். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதம் விளாசினார்.ஆனால் ஜோ பர்ன்ஸ் சதம் அடிக்காமல் 166 பந்திற்கு 97 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் இறங்கிய மரன்ஸ் அரைசதம் விளாசினார்.பின்னர் நிதானமாகவும் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 265 பந்திற்கு 151 ரன்கள் குவித்து உள்ளார்.இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை இழந்து 312 ரன்கள் அடித்து உள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 72 ரன்கள் முன்னிலையில் உள்ளது.களத்தில் மரன்ஸ் 55 , டேவிட் வார்னர் 151 ரன்களுடன் உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…