பிரபல விளையாட்டு வீராங்கனை கோனிகா லயக் தூக்கிட்டு தற்கொலை.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள தன்சரை சேர்ந்த கோனிகா லயக் (26). கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட இரண்டு முறை தகுதி பெற்ற போதிலும், சொந்தமாக துப்பாக்கி வாங்க வசதி இல்லாத காரணத்தால் போட்டியில் கலந்து கொள்ள இயலாத சூழலில் இருந்தார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதனைக்கண்ட நடிகர் சோனு சூட் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் ரைபிளை அவருக்கு பரிசாக அளித்தார். இந்த நிலையில், கோனிகா இன்று தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பயிற்சியாளர் கூறுகையில், இது நம் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. அவர் நன்றாகவே இருந்தார். கடந்த 10 நாட்களாக கோனிகா தனது பயிற்சியில் சரியாக கலந்து கொள்ளவில்லை. என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் மனமுடைந்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…