தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி! இந்திய வீரர்களை குறித்த சுனில் கவாஸ்கர்!

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் சிறந்த லெவன் அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” செஞ்சூரியனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!

எனவே இரண்டு அணிகளிலும் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாக விக்கெட் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய அணியில் நான் தேர்வு செய்து வைத்து இருக்கும் பிளேயிங் லெவன் மிகவும் எளிமையாக இருக்கும். அவர்கள் யார் யார் எல்லாம் என்று நான் சொல்கிறேன் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்குவார்கள்.

சுப்மான் கில் மூன்றாவது, நம்பர் 4-லில் விராட் கோலி நம்பர் 5-ல் கேஎல் ராகுல், நம்பர் 6 ஷ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரில் யாராவது மாற்றி மாற்றி களமிறங்கலாம். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின். பின்னர் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் களமிறங்கலாம்.  நான் சொன்ன வரிசை படி வீரர்களை தேர்வு செய்து விளையாடினாள் நன்றாக இருக்கும். ” எனவும் சுனில் கவாஸ்கர்  கூறியுள்ளார். 

Published by
பால முருகன்

Recent Posts

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

1 hour ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

2 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

3 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

3 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

4 hours ago