டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.குறிப்பாக,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பதக்கம் வென்ற இந்தியா:
ஒலிம்பிக்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.அதன்படி, பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும்,பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலமும்,குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா வெண்கலமும்,41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தஹியா வெள்ளியும்,பஜ்ரங் புனியா வெண்கலமும் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கம் கூட இந்தியா பெறவில்லை என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் எழ,அதனை போக்கும் வகையில்,ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சுதந்திர இந்தியாவின் முதல் தங்கப்பதக்கதை வென்று சாதனை புரிந்தார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம்,2 வெள்ளி,4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்றுள்ளது.
முடிவு:
இதற்கிடையில்,மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி பின்னர் மீண்டு எழுந்து,அரையிறுதியை நோக்கி சென்று போராடி தோற்றது.அதேபோல நேற்று கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் மிக குறைந்த புள்ளியில் தோற்றார்.இதனையடுத்து,ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது.
கடைசி தங்கம்:
கடைசி நாளான இன்று பெண்கள் வாலிபால், ஆண்கள் வாட்டர் போலோ, ஆண்கள் மராத்தான் உள்ளிட்ட 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறியது.அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வாட்டர் போலோவில் கிரீஸை வீழ்த்தி செர்பியா ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை வென்றது.
நிறைவு விழா:
இவ்வாறு,கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு போட்டிகள் மூலம் அனைவரின் இதயத்தை நெகிழ வைத்த,ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஜப்பானின் டோக்கியோவில் நிறைவடைகின்றன.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…