டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி?

Published by
பால முருகன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்பி வந்தால் ருத்ராஜுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்ட்டம் தான்.

தோனிக்கு பிறகு சாதனை படைத்த ரோஹித் ஷர்மா..!.

மேலும், இதற்கிடையில், காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் தேர்வுக்கு கிடைக்காததால், டி20 போட்டிகளுக்கு தேர்வுக் குழு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும். எனவே, எந்த வீரர் கேப்டனாக போகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் ஜனவரி 11ஆம் தேதியும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதியும் தொடங்குகிறது.

டி20 எதிர்பார்க்கப்படும் வீரர்கள்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்/ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago