Former Indian cricketer Harbhajan Singh (AP)
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததை அடுத்து, ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, சூர்யகுமார் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி, தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை சமன் செய்தது.
அப்போது, முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை, இதனால், தற்போது போல 2024 டி20 உலககோப்பைக்கும் இளம் வீரர்களை நாடுகிறதா பிசிசிஐ என பல்வேறு கேள்விகள் எழுந்தது. டி20 உலககோப்பையில் ரோகித், கோலி இடம்பெறுவார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே பாண்டியா காயம் காரணமாக வெளியில் இருந்து வருகிறார். இந்த சூழலில், ரோகித்தும், விராட்டும் சமீப காலமாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
எனவே, ஐபிஎல் தொடரின் நடுவே 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. எந்த மாதிரியான வீரர்கள், எம்மாதிரியான அணி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இதன் காரணமாக, முன்னாள் வீரர்கள் என பலரும் இந்திய அணியை குறித்து பேசி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை: நியூயார்க் நகரத்தில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி!
இந்த நிலையில், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் கூறியதாவது, விராட் மற்றும் ரோஹித் அவர்களுக்குள் நிறைய திறமைகள் உள்ளன.
நவம்பர் 2022க்குப் பிறகு ரோகித்தும், கோலியும் டி201 போட்டியில் விளையாடவில்லை. உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. ரோகித் மற்றும் கோலி டி20 உலகக்கோப்பையில் இருப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் , டி20 உலகக் கோப்பைக்கான 2 சிறந்த பேட்டர்களை சுற்றி இந்திய அணியை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இளைஞர்களுடன் நல்ல மூத்த வீரர்களும் இருந்தால் மட்டுமே, ஒரு நல்ல அணி சாத்தியமாகும் என்றுள்ளார். இதனிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித், கோலி, ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல், இந்திய அணி சமீபத்திய டி20 தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…