இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்.
பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் தொடர்புடைய 16 உருவங்களை உடலில் பச்சை குத்தி உள்ளார். அதில் கோலியின் ஜெர்சியின் எண் , விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும், பி.சி.சி.ஐ. மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் உடம்பில் பச்சை குத்தியுள்ளார்.
இதுபற்றி பெஹேரா கூறும்போது, நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். விராட் அவர்களின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக தான் உடலில் பச்சை குத்தி கொண்டேன் என கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் விசாப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டியின் பயிற்சி நேரத்தில் கோலியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தசந்திப்பின் போது கோலி என்னை அவர் கட்டிபிடித்தபோது மகிழ்ச்சி அடைந்தேன் என கூறினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…