இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முதல் டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்த கேட்ச்சை பிடிக்காமல் விட்டனர். ஆனால் ரோஹித் ஷர்மாவின் பீல்டிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது, போட்டியின் 17-வது ஓவரை தீபக் சஹார் வீசினார்.
முதல் பந்தை ஹெட்மயர் தூக்கி அடிக்க பவுண்டரி லைனில் இருந்த ரோஹித் ஷர்மா பறந்து தடுத்தார்.அதற்கு முன் ஹெட்மயர் கேட்ச்சை பவுண்டரியில் இருந்த வாஷிங்டன் சுந்தர் பிடிக்காமல் விட்டார்.ஆனால் அருகில் இருந்த ரோஹித் ஷர்மா பந்தை பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார்.
பின்னர் போலார்டு அடித்த பந்து ரோஹித் ஷர்மாவை நோக்கி வந்தது அதை ரோஹித் ஷர்மா பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து பின்னர் பீல்டிங்கில் மிரட்டிய ரோஹித் போலார்டு கேட்ச்சை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் , பின் ஹெட்மயர் கேட்ச்சை பிடித்து ஹிட்மேன் அசத்தினார்.இப்போட்டியில் ரோஹித் பக்கமே குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…