இதை செய்தால் தோனி சுலமபாக கடுப்பாகி விடுவார்… முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹைடன் சொன்ன பதில்!

Published by
பாலா கலியமூர்த்தி

முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விராட் கோலி போன்றோருடன், இந்தியா இதுவரை உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் எம்.எஸ். தோனியும் ஒருவர். எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஐசிசி பட்டங்களை வென்று சிறந்த கேப்டனாக திகழ்கிறார்.

அதுமட்டுமில்லாமல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 5 பட்டங்களை வென்று, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். இந்த நிலையில், எம்எஸ் தோனிக்கு எது எரிச்சலூட்டும் வகையில் இருக்கும் என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி பேட்டரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் 2024 ஏலம்: எந்தெந்த வீரர்களுக்கு எவ்வளவு விலை..! 333 பிளேயர்களின் முழு பட்டியல் வெளியீடு!

இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறியதாவது, கூலாக இருக்கக்கூடிய எம்எஸ் தோனியை, மைதானத்தில் நீங்கள் சுமாராக ஃபீல்டிங் செய்தால் மிகவும் சுலபமாக கடுப்பேற்றி கோபமடைய வைக்கலாம். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் எம்எஸ் தோனி, தனது கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்திய தருணங்கள் உள்ளன.

இதனால், அவரை எரிச்சலூட்ட வேண்டும் என்றால், சுமாராக ஃபீல்டிங் செய்யுங்கள் அல்லது நல்ல ஃபீல்டிங்கில் முக்கிய பங்காற்றாமல் இருங்கள் கடுப்பாகி விடுவார் என தெரிவித்தார். இதுபோன்று, தோனி மற்றும் மைக் ஹஸ்ஸி ஆகியோருக்கு இடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, எம்.எஸ்.தோனி தான் என்று யோசிக்காமல் கூறியுள்ளார்.  மேலும், மேத்யூ ஹைடன் கூறியதாவது, இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

25 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

55 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago