சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் சூதாட்டம் விளையாடி சிக்கியுள்ளனர். தடை செய்யப்பட்ட ரம்மி சூதாட்டத்தை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து விளையாடி அரசு வாகன ஓட்டுனர்கள் சிக்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். விஷயம் அறிந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அரசு வாகன ஓட்டுநர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்கள் […]
லுடோவில் பணத்தையெல்லாம் இழந்ததால், தன்னையே பணயம் வைத்து விளையாடிய பெண். உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில், நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் வசித்து வரும் ரேணு என்ற லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் அனுப்பும் பணத்தையெல்லாம் சூதாடி அழித்து வந்துள்ளார். அவள் தன் வீட்டு உரிமையாளருடன் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் இழந்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னையே பணயமாக […]
மத்திய டெல்லியின் படேல் நகரில் சூதாட்டத்திற்காக ₹ 200 கொடுக்க மறுத்தவரைக் கொன்ற சிறுவர்கள் கைது. 15 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள், சூதாட்டத்திற்கு ரூ.200 தேவைப்பட்டதால் அருண் பஞ்சால் என்பவரை வற்புறுத்தியதாகவும், அவர் தர மறுத்ததால் கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி அவரைக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், இந்த கொலையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் […]
திருச்சி:உறையூரில் தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது. திருச்சி மாவட்டம்,உறையூரை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நிசா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,5 வது குழந்தையான தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாச நல்லூரை […]