சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
சென்னை : ராயப்பேட்டை அருகே மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். உடனே, எஸ்தரை போலீசார் மருத்துவனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். தற்பொழுது, கைதான நடிகை எஸ்தர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் நடிகை மீனா என்பது தெரிய வந்துள்ளது. இவர் ராயப்பேட்டை அருகே, போதைப் பொருளை விற்க வந்தபோது கையும் களவுமாக சிக்கி கொண்டார். போலீசார் கைது செய்தபோது, அவரிடம் 5 […]
ரஷ்யா : பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார். செய்தி பரிமாற்ற செயலியான ‘டெலிகிராம்’-யை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நோக்கி பிரைவேட் ஜெட்டில் பயணித்த அவரை பாரிஸ் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அவர் மீது, தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், பண மோசடி, சிறார் பாலியல் வீடியோ உள்ளிட்டவற்றை டெலிகிராம் தளம் […]
சென்னை : சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவத்தில் மின்சார ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து, மாம்பலம் ரயில்வே போலீசார் மின்சார ரயிலில் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கண்ணன், வேலவன், கத்தி வைத்திருந்த ஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மூவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே […]
ராஜஸ்தான் : பலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய சில ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கடைசியாக காவல்துறையிடம் கைதாகியும் வருகிறார்கள். அப்படி தான் ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது எஸ்யூவியின் காருக்கு டீசல் போடும்போது மோசமான செயல் ஒன்றில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வைரலாக பரவிய வீடியோவில் நபர் ஒருவர் தனது காருக்கு டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்து டீசல் டேங்க் முழுவதுமாக […]
உத்தரப் பிரதேசம் : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. பலரும், ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு தேவையில்லாத சில விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காவல்துறையிடம் சிக்கி கைதாகியும் வருகிறார்கள். அப்படி தான் உத்திரபிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து திபாயில் ஜவான் படத்திலிருந்து ஷாருக்கானின் பேண்டேஜ் தோற்றத்தை காப்பி அடித்து 6 யூடியூபர்கள் சாலையில் கையில் இரும்பு கம்பிகளுடன் சட்டை கூட […]
உத்தரபிரதேசம் : சமீபத்தில் சமூக ஊடகங்களில் இரண்டு பேர் உயிருடன் ஆமை ஒன்றை தீ வைத்து எரித்த அதிர்ச்சியான வீடியோ வைரலாகி இருந்தது. வீடியோவில் தீ வைத்து எரிக்கும் போது ஆமை துடி துடித்து உயிரிழந்த காட்சி பலரையும் கண் கலங்கவும் வைத்தது. இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வந்த நிலையில், உடனடியாக காவல்துறையினர் நடிவடிக்கையில் ஈடுபட்டனர். விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு […]
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக […]
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார். […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று அங்கு சென்றுள்ளார். இந்த சூழலில், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் ரவி, இன்று துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுவதாக கூறி பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சேலத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு […]
நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக விற்றுவிட்டதாக, நடிகை கௌதமி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். தற்போது, நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபரான அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உட்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார்கைது செய்தனர். முன்னதாக நடிகை […]
கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். கடந்த 28ம் தேதி கோவையில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 5.16 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இதில் […]
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிக்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை நடிகை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து நடிகர் ஜெகதீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெகதீசனை போலீசார் தற்போது கைது […]
முதியவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி மாநகர துணைத் தலைவர் மகேஷ் கைது. சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் சங்கர் என்பவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் இந்து மக்கள் கட்சி மாநகர துணைத் தலைவர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு வசிக்கிறார் முதியவர் சங்கர். இவரிடம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதானது உள்பட மகேஷ் மீது […]
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது. கோவையில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். கார் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரை […]
மும்பையில் 40 ஹோமிங் புறாக்களை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையின் குர்லாவில் (கிழக்கு) உள்ள சால்லில் “அகமது சயாத் என்பவர் தனது குழந்தைகளுக்காக புறாக்களை வாங்கி அவற்றை ஒரு பொழுதுபோக்காக பயிற்றுவித்துள்ளார்” ஒவ்வொரு புறாவின் மதிப்பும் ₹2,000க்கு மேல் என்று சயாத் கூறினார். நவம்பர் 7-ம் தேதி இரவு நடந்துள்ள இந்த திருட்டை காவல்துறையினர் விசாரித்தபோது, அதே பகுதியில் வசிக்கும் ஜீஷன் கான் என்பவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டது என்றும் திருடிய புறாக்களை அதிக விலைக்கு […]
புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைது. புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் அந்த சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்களை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை […]
மும்பையில் வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து 26 பெண்களை மீட்ட காவல்துறை. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் ஒரு வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட குழியில் (ரகசிய அறை) அடைத்து வைக்கப்பட்டிருந்த 26 பெண்களை மும்பை போலீசார் மீட்டுள்ளனர். அங்கு வணிகரீதியாக சதை (flesh trade racket) வியாபாரம் அதாவது விபசாரம் நடந்தாக கூறப்படுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். […]
வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு. இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் […]
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. நிறுவனருமான ஒய்.எஸ்.சர்மிளா தெலுங்கானாவில் பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இன்று டிஆர்எஸ் தொண்டர்களால் அவரது கேரவனை தாக்கி எரித்ததாக, கட்சி தொண்டர்கள் கூறியதையடுத்து வாரங்கல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வாரங்கல் மாவட்டத்தில் ஒய்.எஸ்.சர்மிளாவின் பாதயாத்திரையின் போது இந்த மோதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. […]