ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறல்… ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அதிரடி கைது.!
சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கைதுசெய்யப்பட்ட ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபரை, இப்பொது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மணிலா : சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவை கைது செய்தது அந்நாட்டு காவல்துறை. அவரது ஆட்சிக் காலத்தில் (2016-22) போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து, பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை ஹாங்காங்கிலிருந்து வந்தவுடன் மணிலா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 9:20 மணிக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது செய்யப்பட்டதற்கான தகவலை அந்நாட்டு அரசாங்கமே தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் அதிபர் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு அறிக்கையில், ஹாங்காங்கிலிருந்து வந்தவுடன் டுடெர்ட்டே கைது செய்யப்பட்டதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், போலீசார் அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை விசாரித்து வருகிறது. மேலும், முன்னாள் அதிபரும், அவரது குழுவினரும் நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் அரசு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யப்பட்டு தற்போது PNP அதிகாரிகளின் காவலில் உள்ளார்.