அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
விமானம் உயர முடியாமல், புறப்பட்ட 32 வினாடிகளில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது லனாய்வு பிரிவு (AAIB) 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட சில வினாடிகளில், சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகானி பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 241 பேர் உட்பட, தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். இந்த விபத்து, இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில். இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு (AAIB) 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஜூலை 11, 2025 அன்று நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பித்தது.
அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட மூன்று வினாடிகளுக்குப் பிறகு, அதாவது மதியம் 1:38:42 மணிக்கு, இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ஒரு வினாடி இடைவெளியில் “RUN” நிலையிலிருந்து “CUTOFF” நிலைக்கு மாறியதால், இரு என்ஜின்களும் திடீரென செயலிழந்தன. இதனால், விமானம் உயர முடியாமல், புறப்பட்ட 32 வினாடிகளில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி (கேப்டன் சுமீத் சபர்வால்) மற்றொரு விமானியிடம் (முதல் அதிகாரி கிளைவ் குண்டர்), “நீங்கள் ஏன் எரிபொருளை துண்டித்தீர்கள்?” என்று கேட்க, மற்றவர் “நான் எதுவும் செய்யவில்லை” என பதிலளித்ததாகப் பதிவாகியுள்ளது.
விமானிகள் உடனடியாக சுவிட்சுகளை மீண்டும் “RUN” நிலைக்கு மாற்றியதாக அறிக்கை கூறுகிறது. இதனால், ஒரு என்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கியது, ஆனால் முழு உந்துதலை மீட்டெடுப்பதற்கு முன்பாகவே விமானம் விழுந்து நொறுங்கியது. இரண்டாவது என்ஜின் இயங்கவில்லை. இந்த நிலையில், விமானத்தின் அவசரகால உந்து அமைப்பான ரேம் ஏர் டர்பைன் (RAT) இயக்கப்பட்டு, விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சிக்கப்பட்டது, ஆனால் குறைந்த உயரம் காரணமாக அது வெற்றிபெறவில்லை.
விசாரணையில், எரிபொருளில் கலப்படம் இல்லை எனவும், விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்கர்கள் மற்றும் விமானத்தின் எரிபொருள் தொட்டிகள் சோதிக்கப்பட்டு தரமானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்தபோது வானிலை சீராக இருந்ததாகவும், பறவைகள் மோதல் அல்லது சதி வேலைகள் எதுவும் காரணமாக இல்லை என்றும் அறிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது.
அதே சமயம், விமானிகளின் தகுதி மற்றும் உடல் தகுதியும் சரியாக இருந்ததாகவும், விமானத்தின் இறக்கைகள் (ஃபிளாப்ஸ்) மற்றும் லேண்டிங் கியர் ஆகியவை புறப்படும் நிலையில் சரியாக அமைக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், ஏர் இந்தியா, விபத்து குறித்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை தொடர்கிறது இப்போது புலனாய்வு பிரிவு (AAIB) 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கை மட்டுமே வெளிவந்துள்ளது. விரைவில் இன்னும் விபத்து குறித்த தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.