இன்று ஆவடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற முதல்வர் அங்குள்ள சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். நேற்று பல்வேறு இடங்களில் மழை பாதிப்பு இடங்களை ஆய்வு மேற்கொண்டார். நேற்று இரவு விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். […]