நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட். தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலைஞரின் உளியின் ஓசை, […]
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]