பாவலரேறு என்று தமிழக மக்களால் அன்போடும் உரிமையோடும் அழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். இவருடைய பெற்றோர் துரைச்சாமி-குஞ்சம்மாள் ஆவர்.இவர் தனது தொடக்க கல்வியை சேலத்திலும்,பின் ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே இவர் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகவும் ஈர்க்கப்பட்டார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும்போது […]