சென்னையில் சி.எஸ்.கே 4வது ஐபிஎல் கோப்பை வெற்றி விழா கொண்டாட்டம் தொடங்கியது. 2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள், உலக கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார். அந்த விழா சென்னையில் நடைபெறும் என தெரிவித்திருந்தார். […]